IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 08

Readhere: Irai Vannakam – EP 01 – Part 02. Irai Vannakam – EP 01 – Part 03 Irai vannakam – EP 01 – Part 04 Irai Vanakam – EP 01 – Part 05 Irai Vanakam – EP 01 – Part 06 Irai Vanakam – EP 01 – Part 07
அன்பான நேயர்களே,
ஹஜ்ரத் Spotify சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேட்கிறோம்.
ஹஜ்ரத் அவர்களின் இறை வணக்கம் புத்தகம், எட்டாம் பகுதிக்கு உங்களை வரவேட்கிறோம்.
நான்காம் பண்பு
தொழுகை முழுமை பெறுவதற்கு இறையச்சம் எனும் பண்பு தவிர்க்க முடியாத ஒன்று. மற்றப் பண்புகளைப் போலவே இந்தப் பண்பையும் வளர்த்துக் கொள்வது அவசியமாகும். இறைவனுக்கு நீங்கள் கொடுக்கும் கண்ணியத்தின் அளவைப் பொறுத்தது, உங்கள் உள்ளத்தில் இருக்கிற இறையச்சத்தின் அளவு.
இங்கு நான் குறிப்பிடுவது, ஆழ்ந்த கண்ணியத்தினால் தோன்றுகிற அச்சமே தவிர மனத்தின் பலவீனத்தினால் உருவெடுக்கிற அச்சமல்ல. இந்த அச்சம் மனிதனுக்கும் மிருகத்துக்கும் நடுவில் இருக்கிற திரையைக் கிழித்தெறியக் கூடியது. மனிதனின் முன்னேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவனைச் சோம்பேறியாக்கி உட்கார வைக்கும் சக்தி படைத்தது; எந்தக் காரியத்தையும் பல்லாயிரம் மடங்கு பெரிதுபடுத்திக் காட்டுவதன் மூலம் அவன் முயற்சிக்குத் தடைவிதிக்கும் வலிமை வாய்ந்தது.
இத்தகைய அச்சத்திற்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்தவர்கள் எப்போதும் பயந்து கொண்டுதான் இருப்பார்கள். பயமும் கவலையும் இல்லாமல் அவர்கள் வாழ்ந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் காட்டு மிருகத்துக்கும் கத்தியை ஓங்கிப் பிடித்து நிற்பவனுக்கும் மட்டுமின்றி, கண்கொட்டாமல் பார்க்கும் மனிதனுக்கும் கற்பனையில் தோன்றுகிற விளைவு களுக்கும் கூடப் பயப்படுவார்கள்.
மொத்தத்தில், அவர்கள் நாள் ஒன்றுக்கு ஓராயிரம் தடவை செத்துப் பிழைப்பவர்கள்.
இந்த அச்சத்துக்கு இஸ்லாம் அனுமதி கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, “இறைவன் ஒருவனைத் தவிர்த்து வேறு யாருக்கும் எதற்கும் மனிதன் பயப்படக் கூடாது” என்று தடையும் விதித்திருக்கிறது. “
அச்சம் என்பது, குலவேற்றுமைக்கும் மதவேற்று மைக்கும் அப்பால், பொதுவாக எல்லோரிடமும் காணப்படுகிற மனப்பண்புகளில் ஒன்று; மிக இளம் வயதிலிருந்தே வளர்ந்து வந்திருக்கும் இந்தப் பண்பை ‘மனித இயற்கையில் ஒரு பகுதி’ என்று குறிப்பிடுவதில் தவறு கிடையாது.



