IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 04 ‪

Read here: Irai Vannakam – EP 01 – Part 02. Read here: Irai Vannakam – EP 01 – Part 03

ஹஜ்ரத் அவர்களின் இறை வணக்கம் புத்தகம், நான்காம் பகுதிக்கு உங்களை வரவேட்கிறோம்.

சட்டத்தின் எல்லைக்கு அப்பால்

ஆனால் மறுமைக்குப் பயன்படக்கூடிய ஞானமார்க்கத்தில் மனிதனுக்கு வழிகாட்டக் கூடிய செய்திகள். சட்டத்தின் எல்லைக் கோட்டுக்கு அப்பாற்பட்டவை. 

“உள்ளம் திரண்டு நிற்காத தொழுகைகள் அனைத்தும் தண்டனையை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன” என்பது அறிஞர் ஹஸன் கூறியது. 

“தொழுது கொண்டிருக்கும் ஒருவன் தன் வலப்பக்கம் இருப்பவரையும் இடப்பக்கம் இருப்பவரையும் வேண்டுமென்றே தெரிந்துகொண்டால், அவன் தொழவேயில்லை!” என்பது நபித்தோழரும் சட்ட மேதையுமான மஆது பின் ஜபல் சொன்னது. 

“ஒரு மனிதனின் தொழுகையில் பயபக்தி இல்லை என்றால், அவன் தொழுகை வீணாகிவிட்டது” என்பது ஞானி சுஃப்யான் சவ்ரி போதித்தது. 

இந்த கருத்துக்கள் அத்தனைக்கும் மேலாகப் பெருமானார் பேசுவதைக் கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்.

“ஓர் அடியான் தொழுதால் அவன் தொழுகையில் ஆறில் ஒரு பாகமோ பத்தில் ஒரு பகுதியோ அவனுக்கு நன்மையாகக் கிடைப்பதில்லை. தன் தொழுகையிலிருந்து அவன் புரிந்துகொள்ளும் அளவுதான் அவனுக்கு நன்மை கிடைக்கும்.” 

மன வளர்ச்சிக்கு பெரிதும் தேவையான இத்தகைய கருத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. 

அவை அனைத்தையும் ஒன்று கூட்டித் தொகுத்தால், ஷாஃபி- ஹனஃபி முதலிய ‘மத்ஹப்’களைப்போல், இந்தத் தொகுப்பும் ஒரு ‘மத்ஹபாக’ அமைந்துவிடும். அந்த மத்ஹப்களின் சட்டங்களைப் பின்பற்றும் நீங்கள் இந்த மத்ஹபின் சட்டங்களைப் புறக்கணிக்கக் காரணம் என்ன?