Irai Vanakam | இறை வணக்கம் | S Abdul Wahab Baqavi – Episode 02

அன்பான நேயர்களே, ஹஜ்ரத் Spotify சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேட்கிறோம்.
சிறு குறிப்பு: இதில் புத்தகத்தில் உள்ள எழுத்து அப்படியே தொகுக்க பட்டு உள்ளது. அவர்கள் எல்லா காலத்திலும் தனது ஆக்கம், அனைவருக்கும் அறியும் வண்ணமே இயற்றி உள்ளார்கள். இதில் மாற்றம் செய்ய அனுமதி இல்லை. நன்றி!
நாம் ஹஜ்ரத் அவர்களின் இறை வணக்கம் என்ற நூலில் பயணம் செய்யலாம்.
இறை வணக்கம் அடியார்களுக்குத் தன் கருணையை வாரி வழங்கிய இறைவனே அனைத்துப் புகழுக்கும் உரியவன். அவன் மார்க்கத்தின் ஒளிப்பிழம்புகளைத் திணித்து அவர்களின் இதயங்களைப் புனிதப்படுத்தினான். ‘இறைஞ்சுகிறவர் யாரேனும் இருக்கிறார்களா? நிறைவேற்றித் தருகிறேன், மன்னிப்பு கேட்பவர் யாரேனும் இருக்கிறார்களா? மன்னிப்பு அளிக்கிறேன்’ என்று கூறுவதன் மூலம் மனிதர்களுக்கு பிரார்த்தனையில் ஆர்வத்தை ஏற்படுத்தினான்.

அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் தொழுகையின் மூலம் தன்னுடன் மோன உரையாடல் நடத்துகிற சலுகையைக் கொடுத்தான். அவன் வலிமைமிக்கவன். அவன் ஆட்சி உறுதி படைத்தது. அவன் அன்பு முழுமையானது. அவன் உதவி அனைத்து எல்லைகளையும் கடந்தது.
தொழுகை என்பது மார்க்கம் என்ற மாளிகைக்குத் தூண் போன்றது. மனிதனின் நம்பிக்கைக்கு அது ஓர் உரைகல். இறை வணக்கத்தின் பட்டியலில் அது முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.



