IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 08

இந்த இயற்கைக்கு மனிதன் முரண்பட்டு நடக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனை அல்ல. பலவீ னத்தினால் பிறக்கும் அச்சத்தை வலிமைமிக்க பண்பாக மாற்றுவதற்கு அது பாதை காட்டுகிறது. படைக்கப்பட்டவர்களுக்கும் படைக்கப்பட்டவற்றுக்கும் பயப்படாதீர்கள்- படைத்தவனுக்குப் பயப்படுங்கள் என்று.

முறைப்படி இறைவனுக்கு பயப்படுகிற ஒருவன் வேறு யாருக்கும் எதற்கும் பயப்படுவதில்லை. தன் மனத்தில் இறையச்சத்துக்கு ஆழமாக இடம் கொடுத்துவிட்ட காரணத்தினால், மற்றவர்களுக்கும் மற்றவற்றுக்கும் எப்படி பயப்படுவது என்பதை அவன் மறந்துவிடுகிறான்.

‘இறையச்சம் கொண்டவர்களே பெரிதும் துணிவுள்ளவர்கள்’ எனக் கூறப்படும் கருத்துக்கு வரலாற்று நூல்களில் காணக்கிடைக்கிற ஆதாரங்கள் கணக் கற்றவை.

மக்களுக்கு ஞான மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஒருவர் இறைவணக்கத்திற்கென்று ஒதுக்கி வைத்திருந்த தனி அறை ஒன்றில் தொழுது கொண்டிருந்தார். முதல் ‘ரக்அத்’தை முடித்துவிட்டு இரண்டாம் ‘ரக்அத்’தைத் துவங்கியபோது நச்சுப் பாம்பு ஒன்று அவரது காலடிகளுக்கு மத்தியில் பின்னால் இருந்து நுழைந்து முன்னால் வந்தது. சுஜூது செய்யும் இடத்தில் சிறிதுநேரம் வளைந்து நெளிந்து விளையாடிற்று. அது அங்கிருந்து நழுவிச் செல்வதற்கும் அவர் அங்கு சுஜூது செய்வதற்குமிடையில் இருந்ததெல்லாம் சில வினாடிகள் தான்.

முகத்தில் அச்சத்தின் ரேகை இல்லாமல், அசைவுகளில் சிறிதும் பரபரப்பு இல்லாமல் தமக்கே உரித்தான ஆழ்ந்த தளர்ச்சியுடன் அவர் தொழுது முடித்தபோது அவரது மாணாக்கர்களில் சிலர் வெளிறிபோன முகத்துடன் அறை வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள்.

“என்ன செய்தி…?” என்று கேட்டார் பெரியவர்.

“பாம்பு பெரிய பாம்பு, விஷப் பாம்பு தங்களுக்குப் பின்னாலிருந்து வந்திருக்க வேண்டும்-என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்கே அது சென்றது என்பதை எங்களால் கவனிக்க முடியவில்லை..” என்று துண்டு துண்டாகக் கூறிய மாணாக்கரில் சிலருக்கு கைகள் நடுங்கின; வேறு சிலருக்கு கைகளும் கால்களும் மட்டுமல்லாமல் நாவிலிருந்து வெளிவந்த வார்த்தைகளும் நடுங்கின.

தொழுகையினால் தெளிவடைந்த அவரது முகத்தில் வியப்புத் தெரிந்தது.

“நீங்கள் எல்லோரும் ஏன் இப்படி நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? இறைவனால் படைக்கப்பட்ட இரண்டு படைப்புக்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கிவந்தால் அங்கே பயப்படுவதற்கும் நடுங்குவதற்கும் என்ன இருக்கிறது?” என்று அவர் ஒன்றும் நடக்காததுபோல் கேட்டபோது-

மாணாக்கர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“உங்களில் இருவர் ஒருவரோடு ஒருவர் நெருங்கி நின்றால் அதைப்பார்த்து நடுங்குகிறவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?”

“இல்லை, இல்லவே இல்லை,” உடன் பதில் வந்தது.

“இறைவனின் படைப்புக்களான நானும் ஒரு நச்சர வமும் நெருங்கியிருந்தால், நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்?”

பதில் வரவில்லை. இரண்டாம் தடவையாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

ஞானத்துறையில் முதிர்ந்த தேர்ச்சி பெற்ற அவர் தமக்கு எதிரில் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தவர் களைப் பார்த்துப் பேசினார். அவர் பேசுவதைக் கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள். நான் விவரித்துக் கொண்டிருக்கிற பண்புக்கு அவர் பேச்சு மிகப் பொருத்தமாக விளக்கம் கொடுக்கும் என்பது என் நம்பிக்கை.

பாம்புக்கும் தேளுக்கும் மனிதன் பயப்படுகிறான். அவை இரண்டும் மனிதனுக்குப் பயப்படுகின்றன. உண்மையில் பாம்பைப் பார்த்து நடுங்குகிற மனிதனின் பயத்தையும் மனிதனைக் கண்டு விரைந்து தப்பி யோடுகிற பாம்பின் பயத்தையும் நிறுத்துப் பார்க்க முடிந்தால், பாம்பைவிட மனிதலே. அதிகமாகப் பயப்படுகிறான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். காரணம், பாம்புக்கு இல்லாத ஒன்று மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப் பட்டிருக்கிறது-பாம்பைவிட மனிதன் உயர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக! முறையான பயிற்சியுள்ளவர்களுக்கு அது மிகப் பெரும் வழிகாட்டி. என்றாலும் அதனைச் சரியான பயிற்சிக்கு உட்படுத்தாத காரணத்தினால், அது எறும்பை யானையாகக் காட்டுகிறது; துரும்பைத் தூணாகச் சித்திரிக்கிறது; மனிதவாடைக்கே பயப்படுகிற பாம்பை ‘இஜ்ராயீலா’கப் பெரிதுபடுத்துகிறது.

மற்றப் படைப்புகளுக்கு மாறாக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கற்பனையைத்தான் குறிப்பிடுகிறேன்.