IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 07

Readhere: Irai Vannakam – EP 01 – Part 02. Irai Vannakam – EP 01 – Part 03 Irai vannakam – EP 01 – Part 04 Irai Vanakam – EP 01 – Part 05 Irai Vanakam – EP 01 – Part 06
அன்பான நேயர்களே,
ஹஜ்ரத் Spotify சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேட்கிறோம்.
ஹஜ்ரத் அவர்களின் இறை வணக்கம் புத்தகம், ஏழாம் பகுதிக்கு உங்களை வரவேட்கிறோம்.
இங்கே, ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகப் புகழ் பெற்ற ஓர் ஆசிரியரைப் பற்றிய செய்தியொன்று என் நினைவுக்கு வருகிறது.
-ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு ஷவ்வால் பிறை 13 (கி.பி. 23-7-810) அன்று ‘புகாரா’ என்ற ஊரில் பிறந்து 11ஆம் வயதிலேயே ஹதீஸ் பற்றிய ஆராய்ச்சியைத் துவக்கிய அவர் 16 வயதிலேயே ஹஜ்ஜுக்குப் புறப்பட்டார். பெருமானார் பற்றிய செய்திகளை எல்லாம் சேகரித்துத் தொகுக்கும் குறிக்கோள் கொண்ட அவர், மக்காவிலும் மதீனாவிலும் மிகப் பிரசித்தமான அறிஞர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகளை எல்லாம் கேட்டார். அப்புறம் எகிப்துக்குச் சென்ற அவர் அடுத்த 16 ஆண்டுகள் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பெருமானாரின் வாக்குகளைத் திரட்டினார். ‘அறிவின் பிறப்பிடம்’ என்று பெயர் பெற்ற பஸ்ராவில் மட்டும் அவர் ஐந்தாண்டு தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
முஹம்மது பின் இஸ்மாயீல் எனும் இயற்பெயர் கொண்ட அவர் தொகுத்த நபிக் கருத்துக்கள் ஆதாரப் பூர்வமானவை. ‘ஜாமிவு ஸஹீஹ் (ஆதாரப் பூர்வமான தொகுப்பு) என்ற பெயரில் அவர் உலகத்துக்குக் கொடுத்த நூல் பிற்காலத்தில் அறிஞர்களால் ‘திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக மிகவும் ஆதாரப் பூர்வமானது’ என்று பாராட்டப்பட்டது. நடைமுறையில் ‘ஸஹீஹ் புகாரி’ என்றும், ‘புகாரி ஸஹீஹ்’ என்றும் குறிக்கப்படுகிற இந்நூல் பெருமானாரின் வாழ்வுக்கும் வாக்குக்கும் அரியதொரு திரட்டாகும்.
இந்தத் தொகுப்பை அவர் உருவாக்கிய முறை உங்கள் சிந்தனைக்குரியது: பெருமானார் பற்றிய செய்தி ஒன்றை எழுதுவதற்கு முன்னர் இரண்டு ‘ரக்அத்’* தொழுவது அவரது வழக்கம். அவருடன் பழகியவர்களில் ஒருவர் இதற்குக் காரணம் கேட்டபோது ஆசிரியர் கொடுத்த விளக்கம் மிகத் தெளிவானது.



