IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 07

ஏனெனில் குழந்தைகளுக்குக் கவனம் எனும் பண்பு முழுமையாக இருந்தாலும் தெளிவு எனும் பண்பு அறவே கிடையாது. எனவே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிற குழந்தைகளிடம், தெளிவு ஏற்படுவதற்கான பக்குவம் இல்லாததால், மரியாதையை எதிர்பார்க்கமுடியாது.
இதே போன்று, தொழுகையில் நீங்கள் ஈடுபடும் போது உங்கள் உள்ளத்தில் இறைவன்மீது கண்ணியம் தோன்றவில்லை என்றால், நீங்கள் தெளிவு எனும் இரண்டாம் பண்பை இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் தெளிவு இல்லாத மனத்தில் கண்ணியம் தோன்ற முடியாது. குழந்தைகளின் மனத்தில் பெரியவர்கள் மீது மரியாதை தோன்ற முடியாததுபோல்!

நீங்கள் முழுக் கவனத்துடன் தொழுதால், உங்கள் தொழுகையைப் பற்றி நீங்கள் நன்கு உணர்ந்து கொண் டால் அங்கே கண்ணியத்துக்கு முழுமையான இடமிருந்தால் இறையச்சத்துக்கு நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
முந்திய மூன்று பண்புகளும் ஒன்றென இணையும் போது அங்கு அச்சம் எனும் நான்காம் பண்பு முழு வலிமையுடன் உருவெடுத்துவிடும்.
இதோடு ஏழாம் பகுதி நிறைவு பெறுகிறது.
இறைவணக்கம்அடுத்தபகுதியில் கேட்கலாம். நன்றிவஸ்ஸலாம்.



