IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 09

‘எனவே நான் தொழவில்லை என்றால் எனக்கு வர வேண்டிய நன்மையை துறக்கிறேன் என்பது பொருள். நான் தொழாமல் இருப்பது குற்றம் என்றால், கருணை மிக்க என் நாயன் என்னை நிச்சயமாக மன்னித்து விடுவான். நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் ஒரே விதமாக அன்பு செலுத்தும் இறைவன் என்னை மன்னிக்கமாட்டான் என்று நினைத்து வேதனைப்படுவதற்கு இடமே கிடையாது….’
-இப்படிப்பட்ட எண்ண ஓட்டம் ஒரு மனிதனை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய எண்ண ஓட்டம் கொண்டவன் தொழுகையை மேற்கொண்டால் அவன்
தொழுகை எப்படி அமையும் என்பதையும் நீங்களே கவனித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் உண்மை இது தான், இறையாதரவு என்பது தொழுகையின்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய பண்புகளில் ஒன்று. இந்தப் பண்பின் சிறப்பை யாரும் மறுக்க முடியாது. என்றாலும் இறையச்சம் கலக்கவில்லை என்றால் இறையாதரவு எனும் பண்பு, தட்டிக்கழிக்கும் மனப்பான்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் உருவாக்கி வைத்துவிடும். எனவே உங்கள் தொழுகையிலிருந்து நீங்கள் முழுப்பயன் அடைய விரும்பினால், இறையாதரவு எனும் பண்போடு இறையச்சம் எனும் பண்பையும் வளர்த்துக் கொள்ளுங்கள். பின்னது நான்காம் பண்பு எனும் தலைப்பில் ஏற்கெனவே விளக்கப்பட்டுவிட்டது. முன்னதை நாம் ஐந்தாம் பண்பு என்று குறிப்பிட்டோம்.
இதோடு “ஐந்தாம் பண்பு “ நிறைவு பெறுகிறது.
இறைவணக்கம் அடுத்த பகுதியில் “ஆறாம் பண்பு” கேட்கலாம். நன்றிவஸ்ஸலாம்.


