IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 09

‘மன உறுதியும் புலனடக்கமும் இல்லாததால் நான் தவறு செய்துவிட்டேன்; தவறு செய்து கொண்டிருக் கிறேன். ஆனால் வேண்டுமென்றே நான் செய்த தவறுகளை எல்லாம் என் பெற்றோர் மன்னித்திருக் கிறார்கள். அவர்களைவிடப் பேரன்பும் 

பெருங் கருணையும் கொண்ட இறைவன், நான் வேண்டுமென்றே பாவங்கள் செய்தாலும் அவை அனைத்தையும் நிச்சயமாக மன்னித்துவிடுவான். “இறையருள் குறித்து நம்பிக்கை இழக்காதீர்கள்” என்று அவன் கூறுகிறான். “அதிகமாக மன்னிப்பவன்” என்றும் “மனிதனின் தவறுகளை மறைத்து வைப்பவன்” என்றும் அவன தனக்கு பெயரிட்டுக் கொள்கிறான்.

‘அப்படியானால் தான் மனம் போன போக்கில் ஏன் வாழக்கூடாது? செய்துவிட்ட தவறுகள் குறித்து நான் எதற்காக குற்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்?

‘வலிமையும் அதிகாரமும் நிறைந்த அரசனுக்கு எதிரில் நான் நிற்கும்போது, அச்சத்தினால் என் கைகளும் கால்களும் நடுங்குகின்றன என்பது உண்மை. என் நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகள் உருக்குலைந்து வெற்று ஓசைகளாக அமைகின்றன என்பதும் உண்மைதான். எடுத்து எதிரில் வைக்கவேண்டிய பாத்திரத்தை உடைத்து தூளாக்குகிறேன் என்பதையும் நான் உணராதவன் அல்ல. இதற்கெல்லாம் காரணம் எனக்கு எதிரில் உயரமான ஆசனத்தில் அமர்ந்திருக்கிற அவனுக்கு மன்னிக்கும் மனப்பான்மை கிடையாது என்பதுதான்.

“ஆனால் என் நாயனை பொருத்தவரை நான் சிறிதும் பயப்படவேண்டியது அவசியமே கிடையாது. காரணம், அவன் தன் அடியார்கள்மீது பேரன்பு கொண்டவன்; அவர்கள் செய்யும் தவறுகள் அனைத்தையும் மன்னிக்கக் கூடியவன்.

‘இப்போது அவனை வணங்குவதற்காக நான் தயாராக நிற்கிறேன். அவனை நான் வணங்க வேண்டும்.

என்று கட்டளையிடப்பட்டிருக்கிறேன். தொழுகை என்று அழைக்கப்படுகிற இந்த இறை வணக்கம் உறுப்புக்களின் அசைவுகளாலும் நாவிலிருந்து உருவாகிற துதிப்பு களாலும் அப்போது இருக்கவேண்டிய மனப்பண்பு களாலும் முழுமையடைகிறது என்பதை நான் மறுக்கவில்லை. இப்படி நிறைவேற்றப்படும் தொழுகை மிகச் சிறந்ததாக இருக்கும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

‘ஆனால் இந்த வகையில் தொழுகையை நிறைவேற்று வது என்னைப் பொறுத்தமட்டில், கொஞ்சமும் சாத்திய மில்லை. தெளிந்த ஞானம் படைத்தவர்களுக்கும் புலனடக்கம் எனும் பண்பை வளர்த்துக் கொண்டவர் களுக்கும்தான் அது சாத்தியம். அவர்கள் அறிவுக்காக வாழ்கிறவர்கள்; பேரின்பத்தை நோக்கி முன்னேறு கிறவர்கள்.

‘அவர்களைப்போல் நானும் நடந்துகொள்ள வேண்டும் என்று நான் எப்படி தீர்மானிக்க முடியும்? அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் தடவை கவனத்தைச் சிதற விடுகிற எனக்கு ஒருமித்த மனத்தோடு இறைவனை வணங்குகிற பேறு எப்படி கிடைக்க முடியும்?

‘இந்தப் பேறு எனக்கு கிடைக்காது என்பது உண்மை தான் என்றாலும், அதற்காக இறைவன என்னைத் தண்டிக்க போவதில்லை. காரணம், நான் பலவீனமான மனம் படைத்தவன் என்று இறைவனுக்கு தெரியும். அவன் அளவிட முடியாத கருணை கொண்டவன் என்று எனக்குத் தெரியும்.

‘எனவே நான் ருகூவு செய்யும்போதும் தலையை தரையில் வைத்து சுஜூது செய்யும்போதும் ஏற்படுகிற தவறுகள் குறித்து நான கவலைப்படவேண்டியதில்லை. திருக்குர் ஆனிலிருந்து ஓதப்படுகிற வசனங்களையும் இடை யிடையே சொல்லப்படுகிற துதிப்புகளையும் நான் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. ஆனால் அதற்காக நான். ஏன் பயந்து நடுங்க வேண்டும். என் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்த என் நாயன் தன் கருணையின அரவணைப்பை ஒரு போதும் கொடுக்கத் தவறமாட்டான்.

‘நான் முறைப்படி தொழுதால் எனக்குப் பேரின்பம் கிடைக்கும் என்பதையோ மற்ற இன்பங்கள் அனைத் தையும் விட அது தரத்தில் உயர்ந்தது என்பதையோ நான் மறுக்கவில்லை; என்னால் மறுக்கவும் முடியாது. ஆனால் ஒன்று – என் தொழுகையினால் எனக்குத்தான் நன்மை கிடைக்குமே தவிர என் தொழுகையினால் இறைவனுக்கு எந்த நன்மையும் கிடையாது; எந்தத் தீமையும் உருவாக முடியாது. அவன். இப்படிபட்ட நிலைமைக்கு உயர்ந்தவன். மனிதன் நன்மை அடையவேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இந்தக் கடமையை ஏற்படுத்தியிருக்கிறானே தவிர, தான் நன்மை அடைய வேண்டும் என்பதற்கல்ல.