Irai Vanakam | இறை வணக்கம் | S Abdul Wahab Baqavi – Episode 03 ‪

பெருமானாரிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட அறிவில் ஒரு பகுதியைத் தெளிவுபடக் கூறிவிட்டோம். ஆனால் மறுபகுதியை நாங்கள் வெளியில் கூறினால் எங்கள் தொண்டைச் சங்கு வெட்டி எடுக்கப்படும்…!” 

இறை வசனம் ஒன்றின் வெளிப்படையான பொருளிலிருந்து வெளிச் செயல்களுக்குரிய சட்டம் உருவாகும் அதே நேரத்தில், அதன் உட்பொருளிலிருந்து ஞான மார்க்கத்துக்குரிய ஆத்மிக வாழ்வுக்கான சட்டம் ஏன் பிறக்கக் கூடாது? 

திருக்குர் ஆனிலிருந்து எடுக்கப்படுகிற ஓர் இறை வசனத்துக்கு ஒரே ஒரு பொருள்தான் உண்டு என்று யாரும் கூறமுடியாது. இறைவசனம் ஒன்றில் வெளிப்படையான பொருளும் அந்தரங்கமான – அடிப்படையான அர்த்தமும் மறைந்திருக்கின்றன. திருக்குர்ஆனில் மட்டுமல்லாமல் பெருமானாரின் வாக்குகளிலும் இந்த அமைப்பை நீங்கள் பார்க்கலாம். நபித்தோழர் அபூ ஹுரைராவின் கருத்து ஒன்று இங்கு குறிப்பிடத்தகுந்தது: 

பெருமானாரிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட அறிவில் ஒரு பகுதியைத் தெளிவுபடக் கூறிவிட்டோம். ஆனால் மறுபகுதியை நாங்கள் வெளியில் கூறினால் எங்கள் தொண்டைச் சங்கு வெட்டி எடுக்கப்படும்…!” 

இறை வசனம் ஒன்றின் வெளிப்படையான பொருளிலிருந்து வெளிச் செயல்களுக்குரிய சட்டம் உருவாகும் அதே நேரத்தில், அதன் உட்பொருளிலிருந்து ஞான மார்க்கத்துக்குரிய ஆத்மிக வாழ்வுக்கான சட்டம் ஏன் பிறக்கக் கூடாது? 

இப்போது உங்கள் சந்தேகத்தை எடுத்து முன்னால் வையுங்கள். ‘தொழுகையின் ஆரம்பத்தில் உங்கள் மனம் ஒன்று பட்டு நின்றால் போதுமானது. உங்கள் தொழுகை நிறைவேறிவிடும்’ என்று சட்ட மேதைகள் கூறுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் ஒரு மனிதனின் தொழுகை முழுவதும் ஆழ்ந்த கவனம் பரவி நின்றால் அந்தத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்று அவர்கள் கூறுகிறார்களா? 

அல்லது, ‘தொழுகையின் ஆரம்பத்தில் தான் கவனம் இருக்க வேண்டும். நடுவிலும் முடிவிலும் அறவே கவனம் இருக்கக் கூடாது!’ என்று சட்டம் தீட்டியிருக்கிறார்களா? இப்படியும் இல்லாவிட்டால், ‘தொழுகையின் ஆரம்பத்தில் முழுக்கவனம் இல்லாவிட்டால் அது நிறைவு பெறாது’ என்று தீர்ப்பு வழங்கத் தயங்கியிருக்கிறார்களா? 

இந்த மூன்று கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்ற ஒரே பதில் தான் உண்டு. இதற்கு மாறுபட்ட வகையில் நீங்கள் எதைச் சொன்னாலும் சட்ட நூல்களில் அதற்கு உங்களால் ஆதாரம் காட்ட முடியாது!