Irai Vanakam | இறை வணக்கம் | S Abdul Wahab Baqavi – Episode 03 ‪


Read here: Irai Vannakam – EP 01 – Part 02

இது மற்றவர்களை நீங்கள் ஏமாற்றுவதைவிடக் கொடியது என்பது ஞான மார்க்கத்தில் அனுபவம் பெற்ற வர்கள் மறுக்கத் துணியாத உண்மை. 

“என் நினைவோடு தொழுவீராக” என்ற கருத்து இறை வசனம் ஒன்றிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. இங்கே தொழுகையின்போது நீங்கள் முழுக்கவனத்துடன் இருப்பது கடமை என்ற மறுக்க முடியாத உணமை தெளிவாகத் தெரிகிறது. அரைத்தூக்க நிலையில் நீங்கள் இறைவனை வணங்கும்போது அங்கே அவனைப் பற்றிய நினைவுக்கு இடமே கிடையாது. உங்கள் – தொழுகை முழுவதும் கவனக் குறைபாடும் மறதியும் பரவி நிற்கும் போது ‘இறைவனின் நினைவோடு தொழுகிறேன்’ என்று  உங்களால் எப்படிக் கூற முடியும்? கவனத்தை இழந்த குற்றம் உங்கள்மீது விழுந்திருக்கிறது என்று நான் சொன்னால் அதை உங்களால் எப்படி மறுக்கமுடியும்? 

“கவனம் குறைந்தவராக இருக்காதீர்” என்ற இறை வசனம் என் குற்றச்சாட்டுக்கு சாட்சியாக அமைந்திருக்கிறது; இந்த இறைவசனம், தொழுகையின்போது தோன்றுகிற மறதியை – கவனக்குறைவை ‘ஹராம்’ ஆக்குகிறது, கவனக்குறைவை ஹராம் எனக் கூறும்போது. முழுக் கவனத்தை ‘வாஜிப்’ – கடமை என்று குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்கமுடியும்? 

மேலே இடம் பெற்ற இறைவசனங்களில் முனனது இறைவணக்கத்தில் முழுக்கவனத்தை கடமையாக்குகிற அதே நேரத்தில், பின்னது சிதைந்த கவனத்துக்குத் தடைவிதிக்கிறது. 

“உடலும் உள்ளமும் கலக்காத எந்தச் செயலையும் தன் அடியாரிடமிருந்து இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்ற நபிக்கருத்து, உறுப்புக்களின் அசைவுகளினால் இறை வணக்கம் முழுமை பெற்றுவிடும் என்று எண்ணு கிறவர்களைத் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்புகிறது. 

இப்படிப்பட்ட தொழுகையினால் இறைவனை நெருங்கிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப் பவர்கள் அடுத்து வருகிற நபிக்கருத்தைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ளட்டும். “ஒரு மனிதன் தன் தொழுகையைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து கொள்கிறானோ அந்த அளவுக்குத்தான் அதிலிருந்து அவனுக்குப் பயன் கிடைக்கும்!” 

தொழுகை கடமையாக்கப்பட்ட ஆரம்பக்காலத்தில், போதை கொண்டவர்கள் தொழக்கூடாது என்று இஸ்லாம் இறை வணக்கம் 11 சட்டம் வகுத்தது. அவர்கள் தாம் என்ன சொல்கிறோம், எப்படிச் சொல்கிறோம் என்று புரிந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்று காரணமும் கூறிற்று. 

மதுபானத்தினால் தான் இந்த நிலைமை ஏற்பட முடியும் என்பது சரியான கருத்தல்ல. உலகத்துக் கவலை களைத் தம் எண்ணத்தில் ஆழமாகப் பதிய விட்டவர்களும் குழப்பத்தையும் அச்சத்தையும் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றுக்கு அடிமைப்பட்டவர்களும் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள். எதிரில் விரிந்து கிடக்கிற நிகழ் காலத்தைக் கட்டோடு மறந்துவிட்ட அவர்கள் கடந்த காலத்தில் – அல்லது எதிர்காலத்தில் வாழ்கிறார்கள்.

இவர்கள் தொழுகையை மேற்கொள்ளும்போது ‘முனாஜாத்’ என்று அரபு மொழியில் சொல்லப்படுகிற உரையாடலை எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்தத் தொழுகை எந்த வகையில் மிஹ்ராஜாக அமைய முடியும்? 

இவர்கள் அறவே தொழக்கூடாது என்பது என் கருத்தல்ல. இவர்களுக்குத் தொழுகை கடமையல்ல என்பதும் என் தீர்மானமல்ல. தொழுகை என்பது எனக்கும் உங்களுக்கும் அவர்களுக்கும் கடமையான ஒன்று. அவர்கள் தம் கடமையை நிறைவேற்றும்போது, அதற்கு அடிப்படையான மனப்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் கருத்து. இல்லையெனில் அவர்களின் கடமை நிறைவேறாது என்பதுதான் என் தீர்மானம். 

எனவே நீங்கள் செய்யும் வேலைகள் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவைகளாக இருக்கவேண்டும். நீங்கள் சொல்கிற வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் பக்தியும் பணிவும் கலந்து நிரம்பி நிற்க வேண்டும். தத்துவ வார்த்தைகளைக் காலையிலிருந்து மாலைவரை சொல்லிக் 12 இறை வணக்கம் கொண்டிருந்தாலும் பச்சைக்கிளிக்குத் தத்துவஞானி என்று யாரும் பெயர் சூட்ட முடியாது.