IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 04

ஒரு முக்கோணம்
இங்கு நான் கொடுத்த விளக்கத்திலிருந்து முக் கோணம் ஒன்று பிறக்கிறது. அதன் கோணங்கள் ஒவ் வொன்றுக்கும் ‘தொழுகை’ என்ற புனிதப் பெயர் சூட்டப்படுகிறது.
இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கு ஒரு தொழுகை கடமையாகவிருக்கிறது. இப்போதே ஒரு முடிவுக்கு வந்து விடுங்கள் – நீங்கள் எந்தக் கோணத்தைத் தெரிந்தெடுக்க போகிறீர்கள்?
நீங்கள் முதற் கோணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்களா? அப்படியானால், சட்டத்தின் கண்களுக்குத் திரை போட முற்படுகிறீர்கள். எப்படியேனும் உங்களுக்கு ஆத்மிகத்தை அறிமுகப்படுத்தி விடவேண்டும் என்ற எண்ணத்தில் சட்டம் வகுத்த நெஞ்சங்களை ஏமாற்றுகிறீர்கள்.
நீங்கள் இரண்டாம் கோணத்தைப் பொறுக்கி எடுத் தால் சட்டத்துக்கு முன்னால் ‘நல்ல பிள்ளை’ என்று பெயரெடுக்கப் பார்க்கிறீர்கள். ‘ஃபத்வா’வின் வாள் வீச்சிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு உங்கள் தொழுகையைக் கேடயமாக்க முனைகிறீர்கள். அறிவைத் தேடி அலைகிற எந்த மனிதனும் – மனத்தைத் தூய்மைப் படுத்த நினைக்கிற எந்த மானிடனும் செய்யத் துணியாத வேலை இது!
சிறு துளிகள் பல ஒன்றாகச் சேர்ந்தால் பெரு வெள்ளமாகலாம்; நான் மறுக்கவில்லை. ஆனால் ஒரு சிறுதுளிக்கு யாரும் பெருவெள்ளம் என்று பெயர் சூட்ட இயலாது. இதை நீங்கள் மறுக்க முடியாது.
முதலில் கோணலானால் முழுவதும் கோணலாகும் என்பது உண்மை. இதன் அடிப்படையில் முதலடி நேராக அமைந்துவிட்டால் இறுதிவரை அனைத்து அடிகளும் சீராக அமைந்துவிடும் என்பது நம்புவதற்கு இடமுண்டு.
ஆனால் முதலடியை நேராக வைத்துவிட்ட அனைவரும் அடுத்த அடிகள் எல்லாவற்றையும் ஒழுங்காக வைத்துத் தம் குறிக்கோளை அடைந்துவிடுவார்கள் என்று கூறுவது தர்க்க ரீதியானது அல்ல.
எனவே தொழுகையில் முதலடியை மட்டுமன்றி, அனைத்து அடிகளையும் நேராக வைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்குச் சட்ட நூல்கள் தடை விதிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவை மறைமுகமாக ஆதரவும் கொடுக்கின்றன. சட்டங்களைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள்; இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
நீங்கள் மூன்றாம் கோணத்தைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் மன வலிமைக்கு அது சரியான எடுத்துக்காட்டு. எனவே உங்களுக்கு நிச்சயமாக இருக்கிறது அறிஞர் பெருமக்களின் பாராட்டு. இதையுமுடி மறைக்கிறவர்கள் செய்யும் வேலைக்குப் பெயர் பெரும் திருட்டு.

மொத்தத்தில், மார்க்கம் வலியுறுத்துகிற செயல்கள்-மனப் பண்புகள் அனைத்திலும் வெளிப்பார்வைக்குத் தெரியாத உட்பொருள்கள் இருப்பதுபோல், தொழுகையிலும் பல மர்மங்கள் பதிந்து கிடக்கின்றன. அவற்றை நீங்கள் புரிந்து கொண்டால், ‘கவனம் என்பது’ தொழுகையின் உயிர் எனும் என் கருத்துக்கு விளக்கம் கேட்க மாட்டீர்கள்.
இஹ்யாவு உலுமித்தீன் என்ற இந்தப் பெருநூலில் ஒரு பகுதியான ‘காலயிதுல் அகாயித்’ எனும் பிரிவில், வெளிப்படையான அறிவுக்கும் அடிப்படையான அந்தரங்க அறிவுக்குமுள்ள வேற்றுமையை விரித்துக் கூறியிருக்கிறேன். அங்கு சொல்லப்பட்ட செய்திகளில் ஒரே ஒரு வரியை மட்டும் இப்போது உங்கள் சிந்தனைக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
இறைமார்க்கத்தின் மர்மங்களைத் தெளிவாக எடுத்துரைக்க முடியாமற் போனதற்கு மக்களின் பலவீனம் ஒரு காரணமாகும்!”
ஆத்மிக வெற்றிக்கான பாதையைத் தேடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இது போதுமானது.
இதோடு நான்காம் பகுதி நிறைவு பெறுகிறது.
இறைவணக்கம்அடுத்தபகுதியில்ஐந்தாவது chapter “கவனம் என்றால் என்ன?” கேட்கலாம். நன்றி வஸ்ஸலாம்.



