இறையாதரவு எனும் இந்தப் பண்பு, நீங்கள் செய்த தவறுகளினால் தோன்றிய குற்ற மனப்பான்மைக்குப் பரிகாரம் செய்யும். இறையாதரவும் உங்கள் இறையச்சத்துடன் தொழுகையில் கலந்து நின்றால், உங்கள் தொழுகை அச்சமும் ஆதரவும் பிணைந்து நல்லதொரு தொகுப்பாக அமைந்துவிடும். அங்கே இறையச்சத்தினால் ‘எந்தச் செயலுக்கும் விளைவு உண்டு; எந்த குற்றத்திற்கும் தண்டனை உண்டு’ என்ற நம்பிக்கை பிறக்கிற அதே நேரத்தில், இறையாதரவினால் ‘என் தவறுகளைவிட இறைவனின் அன்பு மிகப் பெரியது; அவன் கோபத்தைவிட அவன் கருணை மிக விரிவானது’ என்ற
Secret
Wisdom









